காயகல்பக் காய் "அவரை"

                                                         
      


                   காயகல்பக் காய் "அவரை"
மது நாட்டு மக்களை மிக வேகமாக ஆட்கொண்டு வரும் வியாதிகளில் அதி முக்கியமான மூன்று வகைகளைக் குறிப்பிடலாம்! 


1.  மாரடைப்பு.

2.  சர்க்கரை நோய்.

3.  ஆண்-பெண் மலட்டுத்தன்மை.


 இதை வைத்து பல ஆயிரம் கோடி வியாபாரம் அமோகமாக நடந்து வருவது, நாம் கண்ட உண்மை.

  • மேற்கண்ட நோய்கள், யாரையும் எப்பொழுது வேண்டுமானாலும் தாக்கலாம், இதற்கு பல்வேறு காரணிகளை நாம் குறிப்பிடலாம்.  நமது வாழ்வியல் முறையில் ஏற்பட்ட மாறுதல்கள் நம்மை கொடிய நோய்களுக்கு அழைத்துச் செல்கிறது.


  • ஆட்டு மந்தை போல் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம்.  நம்  வீட்டுத் தோட்டத்தில் எவ்வித சிரமமும் இன்றி வளரும் "நாட்டு அவரைக்காய்" வாரம் ஒரு முறையாவது பயன்படுத்தினால் பலவித நன்மைகளை செலவின்றி பெறலாம்.  குறிப்பாக, பிஞ்சு அவரைக்காயில் அபரிமிதமான ஆற்றல் பொதிந்துள்ளது.

  • அவரை காயில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் "அமிலம்" அதிக அளவில் உள்ளது.  மேலும் கெட்ட கொழுப்பை ரத்த குழாய்களில் சேராமல் தடுப்பதோடு கொழுப்பு அடைப்புக்களை நீக்குகின்றது.

  • அவரைக்காயில் மிக அதிகப்படியான "நார்ச்சத்து" உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் முடிந்த அளவு உணவில் எடுத்து கொள்வது சிறந்த பயனை தரும் என்பதில் அய்யமில்லை. மேலும் "புரதச்சத்து" அதிக அளவில் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு அவரை ஒரு அருமருந்தாகும்.

  • அவரைக்காய் நமது உடலுக்கு குளிர்ச்சியை தரவல்லது, பித்தத்தை தணிக்கக்கூடியது.  ஆண்களுக்கு "உயிர் அணுக்களை" நீர்த்துப் போகாமல் வைப்பதோடு இழந்த உயிர் சக்தியினை புதுப்பிக்கும் ஆற்றல் அதிக அளவில் உள்ளது.

  • பெண்களுக்கு வரும் "கருப்பை புற்றுநோயினை" தடுப்பதோடு மலட்டுத் தன்மையினை போக்குகிறது.

  • குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் தினமும் அவரையை இரவில் சாப்பிட்டு வந்தால் "விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க" அதிக வாய்ப்புகள் உள்ளது.

  • "மிக கொடிய நோய்களை" எளிதாக கட்டுப்படுத்துவதோடு வந்த நோயினை குணப்படுத்துவது இதன் தனிச்சிறப்பாகும்.

  • பல அற்புத சக்தியினை கொண்ட அவரைக்காயை நாமும் பயன்படுத்துவதோடு எல்லோருக்கும் பயன்தரும்படி செய்வோமாக...

திருச்சிற்றம்பலம்










கருத்துகள்