இராமபிரானின் மருமகனாம் முருகப்பெருமான்




இராமபிரானின் மருமகனாம் முருகப்பெருமான்


திருமுருகனின் திருப்புகழை பாடிவந்த அருணகிரிநாத ஸ்வாமிகளின், அனைத்து பாடல்களையும் ஆராய்ந்தோம் எனில், முருகப்பெருமானை சிவகுமாரனாக, மலைமகள் மகனாக, வள்ளி மணாளனாக, மயில்வாகனனாக, வேல்முருகனாகப் போற்றியது மட்டுமின்றி, திருமாலின் மருமகனாகவும்  பாடியுள்ளார்.  குறிப்பாக, ராமாவதாரத்தில் பகவானுடைய குணாதிசயங்களைப் பற்றி பல இடங்களில் விரிவாக வர்ணித்துள்ளார்.

அதன்மூலமாக அந்த அவதாரத்தின் ஏற்றத்தினை உலகுக்கு அறிவித்து, அத்தகைய மகிமை பொருந்திய, ராமபிரான் மருமகனாம் முருகப்பெருமான் என்று சொல்லி பெருமிதம் அடைந்துள்ளார்.

குமரக் கடவுள் திருவடி போற்றி, கோசலைக்குமரன் சேவடி போற்றி.

நூல் ஆதாரம்: குமரனும் கோசலை குமரனும் எனும் திருப்புகழில் ராமாயணம், ஆண்டு 1964.

__________________________________________________

மகான் திருமூலர் அருட்குடில்,
ஈச்சனாரி, கோயம்புத்தூர்.
Mb:  96 88 56 86 55

https://www.facebook.com/yenthiram/





கருத்துகள்