"இல்லறத்தை இனிமையாக்கும் மங்கள கிழங்கு?" இது என்ன புது குழப்பம், புதியதாக புரளியை கிளப்புகிறார்கள்...கலியுக ஆன்லைன் விஞ்ஞானிகள்!...
அச்சம் கொள்ளவேண்டாம் அன்பர்களே, நாம் அன்றாடம் பயன்படுத்தும் உருளைக்கிழங்குக்கு மற்றொரு பெயர் தான் மங்கள கிழங்கு.
உலகில் கோதுமை மற்றும் அரிசிக்கு அடுத்தபடியாக உட்கொள்ளப்படும் அருமையான உணவு உருளைக்கிழங்கு என்பது நாம் அறிந்த ஒன்று.
"பால் குடிக்கும் குழந்தை முதல் பல் போன பெரியவர்கள்" வரை விரும்பி உட்கொள்ளும் கிழங்கு இது தான் என்பது திண்ணம்.
சைவத்தில் முருங்கையும், அசைவத்தில் நண்டுவும் சிற்றின்பத்தை தூண்டும் உணவு வகைகள் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை...உண்மையும்கூட.
அதற்கும் மேல் ஒன்று உள்ளது என்றால் அதுதான் நமது உருளைக்கிழங்கு...
வடநாட்டு மக்கள் அதிகம் விரும்பி உட்கொள்ளும் கிழங்கு இது தான்...ஆனால், தென்னாட்டு மக்கள் இந்த கிழங்கை வாயு தொந்தரவை ஏற்படுத்தும் என்று ஒதுக்கி விடுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்...இந்த கிழங்கை நன்றாக மென்று உட்கொண்டால் எவ்வித கெடுதல்களையும் அளிக்காது என்பது நம் முன்னோர்கள் அனுபவத்தில் கண்டதாகும்.
"உயர் இரத்த அழுத்தம்" நமது இல்லற இன்பத்துக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் ஒரு அமைப்பாகும். உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் உயர் இரத்த அழுத்தம் பெருமளவு கட்டுப்படுத்தப்படுவதோடு, சிற்றின்பத்தை தூண்டும் காரணிகளை ஊக்கப்படுத்துகிறது.
ஆகவே, வாரம் ஒரு முறையாவது உருளைக்கிழங்கை உட்கொண்டு இல்லறத்தை இன்பமயமாக்குவோமாக...
திருச்சிற்றம்பலம்.
மகான் திருமூலர் அருட்குடில்,
ஈச்சனாரி, கோயம்முத்தூர்.
MB: 96 88 56 86 55
mahaanthirumoolar@gmail.com
https://www.facebook.com/mahaanthirumoolar
thirumoolar2017@twitter
https://mahaanthirumoolar.blogspot.in
கருத்துகள்
கருத்துரையிடுக