-ஓம் நமசிவாய-
"சிவனடியார்களில் பலர் போலியாக ஊடுருவி விட்டதால், உண்மை சிவனடியார்கள் கதி பரிதாபமே"
***அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்***
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு குட்டிக்கதை அருளியுள்ளார்... ஒரு சிவனடியாரின் எதிர்வீட்டில் விபச்சாரம் செய்யும் பெண் ஒருத்தி குடியேறினாள்...
நமது சிவனடியாரோ, அன்றுமுதல் அவர்பணிமறந்து, எத்தனை பேர் வருகிறார்களோ, அத்துணை பேருக்கும் ஒவ்வொரு கற்களாகச் சேமித்து, மலைபோல் குவித்தாராம்...பின் அக்கற்களை எண்ணி வியந்தாராம்.
காலங்கள் கடந்து, இருவரும் இறந்தபின், "அடியாருக்கு நரகமும்"... "அப்பெண்ணுக்கு சொர்க்கமும்"...
இப்போது, அடியாரின் கேள்விக்கு அம்பலத்தார் உரைத்தார்...
அவளது தொழிலை அவள் செவ்வனே செய்தாள்....உனது சிவப்பணியை விட்டு, உனை யார் அவளை கண்காணிக்கச் சொன்னார் என்றாராம்...
"63 நாயன்மார்களின் வரலாறும், இறைவன்மேல் மாளாத அன்புகொள்வது எவ்வாறு என உரைப்பதே"
கருத்துகள்
கருத்துரையிடுக