***திருமுறைக்குப் பெருமைதரும் திருமந்திரச் சக்கரங்கள்***

                                                               -ஓம் நமசிவாய-

மகான் திருமூலர் அருளிய திருமந்திரம்...

பத்தாம் திருமுறை: தந்திரங்கள் ஒன்பது.

நான்காம் தந்திரம்:  சக்கரங்கள் அதாவது யந்திரங்கள் பற்றிய முழுமையான விளக்கம்.




பொதுவாக, யந்திரங்கள் ஏராளம் உண்டு.  எங்கும் எளிதில் பெறலாம்.  திருமந்திரச் சக்கரங்கள் தவிர...

ஏன் என அறிவோம்...

திருமந்திரம் கூறும் வழிமுறைப்படி யந்திரங்கள் அமைப்பது சற்று கடினமே!

ஆனால், அவ்வாறு முறையாக அமைக்கப்படுபவை எண்ணிலடங்கா நன்மைகளை அருளும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

உலோகத் தகடுகள் புனிதப்படுத்துதல், சுபநேரங்களில் வரைதல், அதற்குரிய வாசனாதி திரவியங்கள் உபயோகம், 108 மூலிகைகளால் சிவயாகம், மந்திர அருச்சனைகள், நிவேதனப் பொருட்கள், இதன் மலர்கள், இன்னும் எவ்வளவோ தெய்வீ க வழிபாட்டு முறைகள்...

"யந்திரங்களை இல்லத்தில் வைத்தாலே குபேரன் ஆகலாம் என்பது முறையானது அல்ல"

வழிபாட்டு முறைகள் சிலவற்றை முறையாகக் கடைபிடிக்க... நன்மைகள் பல பெறலாம்... இது நம் முன்னோர்கள் கண்டறிந்து சொன்ன ரகசியம்.

*** பசுவின் பாலைத் தயிராக்கி,      தயிரை மோராக்கி,      மோரிலிருந்து வெண்ணெய் திரட்டி,     வெண்ணெய் நெய் ஆனால் - பலகாலம் பயன்படுமே ***

    யந்திரங்கள் வழிபாடு இதுபோலத்தான்...

"அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே"
                                                                              - திருமந்திரம் -


திருச்சிற்றம்பலம்





கருத்துகள்