திருமந்திரச் சக்கரங்களை விற்பனை செய்வது சரியா?

                                                        -ஓம் நமசிவாய-

திருமந்திரச் சக்கரங்களை விற்பனை செய்வது சரியா?

அப்படியானால், திருமந்திர நூல்களை விற்பது சரியா? நூல் ஆசிரியரின் வலியினை யார் அறிவர்?



திருமூலர் மகானின் புகைப்படம் ஒன்று தயார் செய்ய, புகைப்படக் கலைஞர் அதற்கான தொகையினைப் பெற்றுக்கொண்டார்.

திருமூலர் சக்கரம் அமைக்க தேவையான வாசனை திரவியங்களை விற்றவர், அதற்கான  தொகையினை நிர்ணயித்தார்.

உலோக தகடுகள், மற்ற யந்திரங்களுக்கு விலைபேசியும், திருமந்திரச் சக்கரங்களுக்கு இலவசமாகவும் கிடைப்பதில்லை.  

இதை அமைப்பவர், பெரும் பொருளீட்ட வேண்டும் எனும் எண்ணமில்லாதவராக இருத்தல் நலம். 

இத்தகைய உன்னதமான சக்கரங்களைத் தயார் செய்ய, அதற்குரிய பொருட்செலவுடன், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் பெறுதல் தவறில்லை.  தூய மனதுடன் எவர் செய்யினும் நன்றே!

இலவசமாக மட்டுமே விநியோகிக்க வேண்டுமெனில், ஏதேனும் பெரும் செல்வந்தர், அதற்கான  மூலப்பொருட்களையும், அமைப்பவரின் படியினையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, இது சாத்தியம்.

****இலவசத்தால் நம் நாடு படும் பாட்டை நாம் அறிவோம்****


"சொல்லுதல் யார்க்கும் எளிய - அரியவாம்
  சொல்லிய வண்ணம் செயல்"                               --- திருக்குறள்.

திருச்சிற்றம்பலம்.

கருத்துகள்