***சிவ ஆலய குடமுழுக்கு விழா***
-உ-
ஓம் நமசிவாய
எம்பெருமான் திருவருளால் கடந்த 12/09/2018, புதனன்று, காலை 9 மணியளவில் நமது கோவையில் சிவ ஆலய குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
AR-2 - PRS காவலர் குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள, அருள்மிகு பாலமுருகன் ஆலயத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அருள்மிகு மகுடேஸ்வரர்
நந்தியம்பெருமானுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இத்துடன் காலபைரவர் சன்னதியும் தனியே
அமையப்பெற்றது.
மேலும் சிறப்பு என்னவெனில், தூய தீந்தமிழ் மந்திரங்கள் மூலம் தமிழ் முறையில் இக்குடமுழுக்கு விழா நடைபெற்றது.
மேலும் சிறப்பு என்னவெனில், தூய தீந்தமிழ் மந்திரங்கள் மூலம் தமிழ் முறையில் இக்குடமுழுக்கு விழா நடைபெற்றது.
காவல்துறை உயரதிகாரிகள், காவலர் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டு, எம்பெருமானின் திருவருளுக்குப் பாத்திரமாயினர்.
அன்னதான நிகழ்வும் அருமையாக நடந்தேறியது.
இவ்வாலயத்திற்கு மிக உன்னதமான யந்திரங்கள், நமது அருட்குடில் மூலம் பிரத்யேகமாக "கையால் மட்டுமே எழுதப்பட்ட சிவச்சக்கரங்கள்" பீடங்களுக்காகத் தயார் செய்யப்பட்டது. சிவயாகங்கள் மூலம் மந்திரசித்தி செய்யப்பெற்றவை...
மேலும், இத்திருக்கோவிலில் பல்வேறு ஆலயங்கள் ஏற்கனவே அமைத்துள்ளது.
தொடர்ந்து 48 நாட்கள் ஒரு மண்டல வழிபாட்டுக்கும் சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளனர் நமது ஒருங்கிணைப்பாளர்கள்.
பல தலைமுறைகள் கடந்தும் இவ்வாலயம் பெரும் சிறப்புடன் விளங்கும் என்பது எம்பெருமானின் திருவருளாகும்.
திருச்சிற்றம்பலம்.
கருத்துகள்
கருத்துரையிடுக