**திருமூலர் பெருமானின் திருவம்பலச் சக்கரம்**
- ஓம் நமசிவாய -"சிவன்" - முழுமுதலானவன்... அழிவற்ற பெருஞ்செல்வமும் அவனே!
ஏழாயிரம் மந்திரங்கள் அனைத்தும் விந்து, நாதம் இரண்டில் முடிவன...திருவம்பலத்தோடு நாம் பொருந்த அதுவே சிவமாய்த் திகழும்.
சிவாயநம எனும் திருவைந்தெழுத்து ஓதி வழிபட, திருவம்பலக் கூத்தைக் காண்பதுடன், திருவடிப்பேறு கிட்டும் என்பது திருமூலர் கண்ட உண்மை...
"சக்கரங்களில் முதன்மையாக அருள்பாலிப்பது திருவம்பலச் சக்கரமே!"
பல்வேறு சிறப்புக்களை ஒருங்கே பெற்ற தெய்வீக சிவச்சக்கரமாம், மேற்கண்ட யந்திரம், நமது மஹான் திருமூலர் அருட்குடிலில் பல ஆண்டுகளாகத் தயார் செய்யப்படுகின்றது...
"கையால் மட்டுமே எழுதப்பட்டு, தெய்வீக ஆற்றல் கொண்ட சிவமந்திரங்கள் மூலம், ஆகம முறை யாகங்களால் ஒருமித்த மனதுடன் புனிதமான முறைகளால் உருவாக்கப்படுகின்றது...
மேன்மையும், தகுதி வாய்ந்தோர்க்கு மட்டுமே இது அமையும் என்பது எம்பெருமானின் சான்று...
எந்தவொரு நற்செயலுக்கும், சில முரண்பட்ட கருத்துக்கள் உண்டு...
முறையாகப் பயிற்சி பெற்று, மூன்று தலைமுறைகளாகத் தொடரும் தெய்வீகப் பணி இதுவாகும்...
ஒரு மாதகாலம் ஓய்வின்றி உழைத்தாலும், ஒரு சில சக்கரங்கள் மட்டுமே உருவாக்க முடியும்...
இதன் தன்மை மாறாது திருமூலர் காட்டிய வழியில் தயாரிப்பது, பெரும் சவாலான விஷயமே - இக்காலத்தில்...
நேர்மையுடனும் - நெஞ்சுரத்தோடும் சிவனருட்துணைகொண்டு இப்பணி செய்வதால், எம்பெருமான் அருட்கடாட்சம் என்றும் உண்டு...
திருமந்திரச் சக்கரங்கள் பற்றி உணர்ந்தோர், மேலும் விருப்பமுடையவர்களுக்கு மட்டுமே தயார் செய்யப்படுகின்றது...
நமது மஹான் திருமூலர் குடிலில் எவ்வகையான இறைபணிகள் நடக்கிறது என அறியாமல், வியாபாரம் செய்கின்றனர் என சிலர் எண்ணலாம்...
அவை எம் ஈசனின் சோதனை என நினைத்து, நம்பிக்கையுடன் சிறந்த செயல்திறனுடன் பணி செய்ய உணர்த்துகிறார் என்பதாம்...
மனிதவாழ்வை வளமாக்கும் சக்கரங்கள் இவை, என ஆயிரக்கணக்கான பெருமைமிகு அருளாளர்கள் உரைதந்து சென்றாலும், இச்செயல் செய்ய இதுவரை எவருமில்லை ஏனோ...
திருமந்திரம் கற்றுணர்வோம்! தீர்க்கமான வாழ்வினைப் பெற்றிடுவோம்...
ஆதாரம்: திருமந்திரம் நான்காம் தந்திரம்.
திருச்சிற்றம்பலம்.
மஹான் திருமூலர் அருட்குடில்
ஈச்சனாரி, (மஹாலக்ஷ்மி மந்திர் அருகில்)
கோவை - பொள்ளாச்சி பிரதான சாலை,
கோயம்புத்தூர் - 641021
அலைபேசி: 96 88 56 86 55.
புலனம் : 97 88 11 9224.
கருத்துகள்
கருத்துரையிடுக