முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
***கடுகைப் பற்றி ஓர் கருத்துள்ள இடுகை***
***கடுகைப் பற்றி ஓர் கருத்துள்ள இடுகை***
அன்றாடம் நாம் பயன்படுத்தும் கடுகைப் பற்றி எத்துணை பேர் அறிந்துள்ளோம்?
இஞ்சியும் பூண்டும் விற்பவர்க்கு, அதன் மகத்துவம் பெரும்பாலும் தெரிவதில்லை.
அதுபோல, சமையலறையில் முக்கிய இடம் பெற்றுள்ள கடுகு, நம் உடலுக்கு ஓர் மாமருந்தாகும். இதனை நாம் அறிவதில்லை.
சமையலுக்குப் பயன்படும் கடுகு தவிர, மேலும் சிலவகைக் கடுகுகள் சித்த மருத்துவத்துக்குப் பயன்படுகிறது.
"வயிற்றுப்போக்கு நிற்காமல் அவதிப்படுவோர், இரண்டு தேக்கரண்டி கடுகினை வாணலியில் இட்டு
நன்கு பொரித்துக் கொள்ளவும். பின் அதனை குருணையாக நெரித்து, சூடான சாதத்தில் பசுநெய் அல்லது தேங்காய் எண்ணெய் விட்டு, சிறிதளவு உப்பு சேர்த்து பிசைந்து உண்ண, உடனடியாக பேதி நிற்பதுடன் உடலுக்கு ஆரோக்கியம் தரும்."
அக்காலந் தொட்டே, இதனைப் "பாட்டி வைத்தியம்"என்று கூடச் சொல்வர்.
கடுகு எண்ணெயில் தயார் செய்யப்பட்ட ஊறுகாய் முதல் சில உணவுப் பொருட்கள் வரை கசப்பாக இருப்பினும் நமது உடல் ஆரோக்கியத்துக்கான அருமருந்தாகும்.
எண்ணெய் காய்ந்ததா என, கடுகு போட்டுப் பார்த்து தெரிந்து கொள்வதாக ஏராளமானோர் நினைத்திருப்பர். ஆனால் உண்மை என்னவெனில், நமது சமையல் எண்ணெயில் உள்ள விஷத்தன்மையை சிறிதளவு கடுகு முறிக்கக் கூடியதாகும்.
கடுகினைப் போலவே, சீரகம், மிளகு, வெந்தயம், கொத்தமல்லி போன்ற ஏராளமான உணவுப் பொருட்கள் சுவைக்கு மட்டுமல்ல, மருந்தில்லா மருத்துவம் எனவும் உணர்வோம்.
படித்தவர்கள் பயன்பெறவும்! எல்லோரும் பயன்பெற பகிரவும்.
வாழ்த்துக்களுடன்...
மஹான் திருமூலர் அருட்குடில்
ஈச்சனாரி, (மஹாலக்ஷ்மி மந்திர் அருகில்)
கோவை - பொள்ளாச்சி பிரதான சாலை,
கோயம்புத்தூர் - 641021
அலைபேசி: 96 88 56 86 55.
புலனம் : 97 88 11 9224.
கருத்துகள்
கருத்துரையிடுக