" உடம்பை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே! "

                                                             -ஓம் நமசிவாய-

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நாம் காணும் ஒரு காட்சி, சில நேரங்களில் சிரிப்பையும், சில நேரங்களில் பதைபதைப்பையும் ஏற்படுத்தும்...

இடுக்குப் பிள்ளையார் ஆலயத்தில் தான் இந்நிகழ்வு...சில அன்பர்கள் எளிதாகவும், மற்றவர்கள் மிகப்பெரும் சிரமத்துடனும், ஒருபுறம் நுழைந்து மறுபுறம் வெளியே வருவதைக் காணலாம்.

தோப்புக்கரணம் போடுவதைக்கூட எள்ளி நகையாடும் நமது மானுடர்கள் அதற்குள் ஒருமுறை சென்றுவர, அவர்களின் தேக வலிமையை உணர்வார்கள்.



" உடம்பை வளர்த்தேன்!
  உயிர் வளர்த்தேனே! "

என்பது போல, முன்னோர்களின் தத்துவங்களை நாம் சிலவற்றையேனும் கடைபிடித்தோமானால், வாழ்வை மகிழ்வுடன் வாழலாம் என்பது நிச்சயம்.

கடவுள் வழிபாட்டுடன் எத்தனையோ அறிவியல் உண்மைகள் புதைந்துள்ளது...

நீங்களும் கிரிவலம் செல்லும்போது அச்சிறு இடுக்கில் புகுந்து பாருங்கள்.  எத்தனை சிரமம், எத்தனை துயரம் எனப் புரியும்...

உங்கள் ஆரோக்கியத்தை உணருங்கள், வாழ்வை யோசிக்க வைக்கும் - அத்துடன் வாழ்க்கை தெரிய ஆரம்பிக்கும்.

--- சிவமயம் ---



கருத்துகள்