!!! நாம் மறந்த நற்செயல்கள் !!!
முன்னோர்கள் நமக்குக் கற்றுக் கொடுத்த ஆன்மீகம், மருத்துவம், உணவுமுறைகள் போன்ற நுண்ணிய வாழ்வியல் கலைகளை மறந்து, தடுமாறுகின்றோம் தற்போது...
அதுபற்றிப் பேசுவோரைக் கேலியும் கிண்டலும் செய்து, நம் தலையில் நாமே மண்ணை வாரிப் போட்டுக்கொள்கிறோம்...
வேம்பு - நாம் அதன் மகத்துவத்தைச் சொன்னால் என்ன சொல்வார்கள் என அறிவீர்கள்...
ஆனால் வெளிநாட்டவர் சொல்லும்போது, அதன் உன்னதம் பல மடங்கு பெருகும்...
கயிற்றுக்கட்டில், பழையசாதம், பசுஞ்சாணம், நம் நாட்டு பாரம்பரியம், இன்னும் எத்தனையோ...
பனம்பழத்தைக் கூட விட்டுவைக்கவில்லை அயல்நாட்டவர்...
அவற்றுள் மிக முக்கியமான ஒன்று " ஹோமங்கள் "
இதுபோல அந்நியநாட்டவர் யாகங்கள் பல செய்து, உடலுக்கும் - உயிருக்கும் உரம்பெற்று வாழ்வது பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை...
வேள்விகளும் - வழிபாட்டு முறைகளும், நம் முன்னோர்கள் நமக்கு அருளிச்செய்த அற்புதங்கள்...
ஆன்மீகம் யாவுமே அறிவியல் உண்மைகளை உள்ளடக்கியதே...
முறையோடு செய்தோமானால், வளங்கள் பெருகும், வாழ்நாள் கூடும், விருப்பங்கள் நிறைவேறும்...
திருமூலர் மேல் ஆணை...
நன்மைகள் பலபெற்று, நலமுடன் வாழ்க...
திருச்சிற்றம்பலம்
கருத்துகள்
கருத்துரையிடுக