திருமந்திரம் வழிகாட்டும் திருவம்பலச் சக்கரம்

***திருமுறைக்குப் பெருமைதரும் திருமந்திரச் சக்கரங்கள்***

*திருமந்திரம் வழிகாட்டும் திருவம்பலச் சக்கரம்*


-ஓம் நமசிவாய-

திருவம்பலச் சக்கரம் இறைவனின் திருக்கோவில் மட்டுமின்றி, நல்லோர் மனங்களிலும் புலப்படும் இயல்புடையது.


ஆணவமலம் நீங்கிச் சிவஞானம் பெற்று, அதில் திளைத்து முற்றிய நிலையே சிற்பரம்.
சிவபெருமானுக்கென்று திருமூலர் அமைத்திட்ட செம்பு பொன்னான நிலையினை திருவம்பலச் சக்கரம் என்பர்.



செம்புபொன் னாகுஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச்
செம்புபொன் னான திருவம் பலமே...


திருமந்திரப் பாடல்: 903.

நடராஜப் பெருமானின் எழுவகைத் தாண்டவத்திற்கும் நூற்றியெட்டுக் காரணங்களுக்கும் அடிப்படையாய் உள்ள
திருவம்பலச் சக்கரத்துள், இறைவனை வரைந்து அடைத்து விடுதலோடு, அதில் இறைவனின் திருக்கூத்தை நடத்துவதற்கு மந்திர உருவேற்ற வேண்டும்.


பொதுவாக மந்திரங்களைத் தன்காது மட்டுமின்றி பிறர் காதுக்கும் கேட்கா வண்ணம் உச்சரித்தல் அவசியம்.


மந்திரங்கள் பொன் போன்றது. "சிவாயநம" என்னும் திருவைந்தெழுத்தினை ஓதும்போது, திருவம்பலம் வரைந்துள்ள செம்புத்தகடு உயிர்பெற்று பொன்னம்பலமாகக் காட்சி தரும்.


ஆணவமலம் நீங்கி ஆன்மா அறிவொளியைப் பெறுவதோடு,
மேலும் பல்வேறு நன்மைகளைப் பெற்றிடலாம்.
இது இறைவனின் திருவடி மேல்ஆணை என திருமூலர் சத்தியம் செய்கின்றார்.


ஹம் என்பது சூரியன், ஸம் என்பது சந்திரன் என்பது போன்ற தெளிவான மற்றும் இரகசியமான விளக்கங்களை மக்களுக்கு எடுத்துரைத்தவர் திருமூலர் பெருமான்.

திருவம்பலச் சக்கரத்தினை சிறிதும் பிழையின்றி, முறையாகக் கையால் மட்டுமே எழுதி, திருமந்திரத்தில் உரைத்தவாறு மந்திர உருவேற்றி வழிபாடு செய்துவர, நன்மைகள் மட்டுமே பெற்றிடலாம். தீமைகள் நம்மை ஒருபோதும் அணுகாது என்பது அனுபவ உண்மை.


திருமூலர் வழிநின்று திருவம்பலத்தை நாடுவோம்.

திருச்சிற்றம்பலம்.

மகான் திருமூலர் அருட்குடில், 
ஈச்சனாரி (விநாயகர் ஆலயம் அருகில்),
பொள்ளாச்சி பிரதான சாலை,
கோயம்புத்தூர் - 641021

அலைபேசி: 97 88 11 9224.


புலனம்: 97 88 11 9224.

https://sivayantra.com/

#sivayantra #tirumoolar #thirumoolar #navakari #thiruvambalachakaram #tantra #mantra

https://wa.me/message/5SIMNNWTJ73NH1






#enthiram #yenthirangal #yantra #chakra #enthras #atcharam #thiruvambalam #navakari #bhuvanapathi #vasthuyantra #srichakram #sudharsanachakram #mahalakshmiyantra #varahiyantra #kalabhairavar #astabhairavar #navagrahayantra #chidhambarachakra #durgaiyantra #ganapathiyantra #mahamrityunjaya #shanmugasadacharam #திருவம்பலச்சக்கரம் #எந்திரங்கள் #யந்திரங்கள் #சக்கரங்கள் #அட்சரங்கள் #திருமூலர் #திருமந்திரம் #நவாக்கரி #காலபைரவர் #ஸ்ரீசக்கரம் #சுதர்சனயந்திரம் #ஷண்முகசடாச்சரம் #கணபதியந்திரம் #நவகிரஹயந்திரம் # 


கருத்துகள்