சிவனை வணங்கு ஜீவன் பெருகும்

        “சிவனை வணங்கு… ஜீவன் பெருகும்”

 

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஐந்தும் பஞ்சபூதங்கள் என அறிவோம்.  இவையன்றி, இப்பூவுலகோ உயிர்களோ இல்லை.

 

இவைகளின் துணை கொண்டுதான் நாம் வாழ்ந்தாக வேண்டும்.  ஆனால் இறைவழிபாட்டில் இவை யாவும் உண்டு.  கோபுரக் கலசங்கள் முதல், கோவில் கருவறை வரை இவற்றின் அறிவியல் ரீதியான தத்துவங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

 

ஏதோ ஒருவித சக்தியே நம்மை வழிநடத்துகின்றது என்பதை, கடவுளை நம்பாதவரும் நம்புகின்றனர்.

 

பிறப்பு முதல் இருக்கும் வரை நமது இதயம் மட்டும் ஓய்வு எடுப்பதில்லை.  இது நடராஜத் தத்துவம் என்பதாகும்.


 


 

 

அணுவினுள் அணுவாய் இயங்கும் நடராஜப்பெருமான், இவ்வுலகம் நின்றுவிடாதபடி நர்த்தனம் புரிகின்றார்.

 

 

      உள்ளம் பெருங்கோவில் ஊனுடம்பு ஆலயம்

      வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்

      தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

      கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

 

சிவலிங்கத் திருமேனி நம் உடல் என்று உணர்வோம், சீவன் உள்ளபோதே சிவத்தை வணங்கி மகிழ்வோம்.


https://www.sivayantra.com/

https://twitter.com/SivaYantra/


https://www.facebook.com/tirumoolar/


https://mahaanthirumoolar.business.site/


https://in.pinterest.com/arutkudil/_created/


கருத்துகள்