கடவுள் பக்தி மட்டும் ஒருவரை கோடீஸ்வரன் ஆக்குமா?
திருப்பதிக்கு சென்று வந்தவர்களுக்கு எல்லாம் திருப்பங்கள் நிகழ்வதில்லை ஏன்?
https://www.sivayantra.com/
பக்தி என்பது நம்பிக்கையை சார்ந்தது தான், என்றாலும் பக்தி என்பது வேறு - நம்பிக்கை என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது. கடவுள் மீது பக்தியை மட்டும் வையுங்கள். நம்பிக்கையை உங்கள் மீது வையுங்கள்.
இரண்டையும் இடம் மாற்றி வைக்காதீர்கள். யாராக இருந்தாலும் சரி, பக்தி பக்தி - என காதை பிடித்துக் கொண்டு 1000 தோப்பு கரணங்கள் போட்டால் உடம்பு வலி தான் வரும். ஆனால், தொழில்-உழைப்பு-சேமிப்பு என சொந்தமாக கை ஊன்றி கரணம் போட்டால் மட்டுமே கைக்கு காசு வரும்.
கோவில் கோவில் என்று சதா சுற்றி வந்தால் கைக்கு துட்டு வராது கடன் தான் வரும்.
வாழ்க்கையில் ஒரு மனிதன் முன்னேற அவனிடம் ஐந்து வகையான பக்திகள் கட்டாயம் இருக்கவேண்டும்...
1. இறை பக்தி.
2. இல்லற பக்தி.
3. தொழில் பக்தி.
4. உடல் பக்தி.
5. ஒழுக்க பக்தி...
இவைகளுடன் சேமிப்பு என்கிற பக்தியை வளர்த்துக்கொண்டால் நிச்சயம் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றத்தை அடையலாம். நல்ல திருப்பங்கள் திடீர் என நிகழும்...நிச்சயமாக நல்ல காலம் பிறக்கும்...
திருச்சிற்றம்பலம்.
_______________________________________________

கருத்துகள்
கருத்துரையிடுக