""பன்னிரு திருமுறை நூல்கள்""

                                               - ஓம் நமசிவாய -

எம்பெருமான் திருவருள் பெற்றிட, நம் முன்னோர்கள் ஏராளமான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்தார்கள்.  ##பன்னிரு திருமுறை நூல்களை##, பொருள் தெரியாவிடினும், சிவசக்தியாக நினைந்து வழிபாடு செய்...வழிபிறக்கும் தன்னால்... என்பதே அதில் ஒன்று.




கோவை, ஈச்சனாரி விநாயகர் ஆலயம் அருகில் அமைந்துள்ளது **கற்பகம் பல்கலைக்கழகம்**... இங்கு ""பன்னிரு திருமுறை ஆய்வு மையம்"" பல ஆண்டுகளாக சிறப்புடன் நடைபெற்று வருகிறது...




அனைத்து உண்மை சிவனடியார்களையும் ஒன்றிணைத்து, மாபெரும் பணியினை சீருடன் நடத்திவருகின்றார்கள்... 

படத்தில் நீங்கள் காணும் நூல்கள் யாவும், இரு மாதங்களுக்கு ஒருமுறை இரு நாட்கள் நடைபெறும் சொற்பொழிவில் கலந்துகொள்ளும், அனைத்து அடியார்களுக்கும் வழங்கப்படும் நூல்கள் ஆகும்.

இரட்டிப்பு மாதங்களின் கடைசியாக வரும் சனி - ஞாயிறு அன்று நடைபெறும் திருவிழா... கற்றுணர்ந்த அடியவர்கள் அருளும் பொருளுரை... மிகவும் அற்புதம்...



அடியேனுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்...

சிவனடியார் என்பதில் பெருமை கொள்வோம்...
சிவச்சின்னங்கள் அணிவதன் அருமை உணர்வோம்.


--திருச்சிற்றம்பலம்--

கருத்துகள்