எளிய முறையில் ஒரே நாளில் சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும் முறை

எளிய முறையில் ஒரே நாளில் சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும் முறை:


தேவையான பொருட்கள்:

1. மக்காச்சோளப்பட்டு - 500 கிராம் {பச்சையாக}.
2. நிழலில் உலர்த்திய  மக்காசோளப்பட்டு - 50 கிராம்.
3. நாட்டுக் கொத்தமல்லி இலை - 500 கிராம்.
4. தர்பூசணி விதை - 200 கிராம்.


தயாரிப்பு முறை:
இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் 1-1/2 லிட்டர் சுத்தமான தண்ணீர் எடுத்து பச்சையான 500 கிராம்  மக்காச்சோளப்பட்டை, தண்ணீர் விட்டு அலசாமல் போடவும். பின் உலர்த்திய பட்டையும் அதனுள் போடவேண்டும்.
தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்ட மல்லி இலையைப் பின்னர் அத்துடன் சேர்க்கவும்.
நிறைவாக கல்வத்தில் இட்டு நன்றாகத் தோய்த்த தர்பூசணி விதையினையும் போடவும்.
மேற்கண்ட கலவை நிரப்பிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.  அவ்வப்போது கரண்டியால் நன்கு கலக்கவும். பின் இந்தக் கலவை நீரினை வடிகட்டி வேறு பாத்திரத்தில் சேமிக்கவும்.
வடித்துத் தண்ணீரை எடுத்தபின் அக்கலவையுடன் மீண்டும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். இதன்மூலம் கிடைக்கும் தண்ணீர்க்கலவையோடு ஏற்கனவே சேமித்த நீருடன் வடிகட்டிச் சேர்க்கவும்.
நிறைவாக மீண்டும் 1/4 லிட்டர் தண்ணீர் எடுத்து திடக்கலவையில் ஊற்றி, மீண்டும் 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும். இதனையும் வடிகட்டி எடுத்து ஏற்கனவே சேமித்து வைத்துள்ள கலவைநீருடன் கலந்துவிடவேண்டும். இவ்வாறு மூன்று முறையும் சேமித்த நீரின் அளவு சுமாராக 2 லிட்டர் மருந்தாக நமக்குக் கிடைக்கும்.
தற்போது இம்மருந்தினை உட்கொள்ளும் முறை பற்றி தெரிந்து கொள்வோம்:
இந்த எளிய மருந்தினை காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அருந்தவும். இவ்வாறு குடிப்பதால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
பின்னர் ஒவ்வொரு மணி நேரம், இடைவெளி விட்டு ஒவ்வொரு டம்ளர் மருந்தினை அருந்த வேண்டும்.
காலையில் தொடங்கி மாலை வரை மருந்தை உட்கொள்ளவேண்டும். 
வழக்கமாக உண்ணும் உணவு முறையினை அந்நாளில் கண்டிப்பாகத் தவிர்க்கவும். இடையிடையே நீர் அருந்தலாம்.
மருந்து எடுத்துக் கொள்ளும் சமயத்தில் ஒரு சதவீதம் பேருக்கு வாந்தி குமட்டல் வரலாம். மூன்று சதவிகித நபர்களுக்கு லேசான வயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது. 
மேற்கண்ட உணர்வுகள் வருமாயின், மருந்து உட்கொள்வதை 1 முதல் 2 மணி நேரம் நிறுத்தி பின்னர் தொடங்கவும்.
இந்த அற்புத மருந்து நமது சிறுநீரகத்தைச் சுத்தப்படுத்தும் இயற்கையான கலவையாகும்.
இதனால் எவ்விதமான பக்கவிளைவுகளும் இல்லை. மிக விரைவில் நமது நோய்த்தன்மை குணமடையும்.


இந்த இயற்கை மருந்தின் பயன்கள்:


1. சிறுநீரகக் கற்கள் உடனே கறைய ஆரம்பிக்கும்.
2. முகம் மற்றும் தோல் பளபளக்கும்.
3. கண்களுக்குக் கீழே வரும் கருவளையம் மறைய ஆரம்பிக்கும்.
4. உடல் புத்துணர்வுடன் இருக்கும்.
5. தூக்கம் நன்றாக வரும்.
6. உடலில் கால்சியத்தின் அளவு உயரும்.
7. பழைய கழிவுகள் உடலை விட்டு நீங்கும்.
8. உடல் வலி மற்றும் முதுகு வலி நீங்கும்.
9. மகளிருக்கு மாதவிடாய் பிரச்சனைகள் தீரும்.
10. அடிக்கடி சிறுநீர் கழிப்பது மற்றும் படுக்கையில் சிறுநீர் கழித்தல் போன்றவை மெல்ல மெல்ல குறையும்.


நன்றி: Dr. Piyush Saxena.

மேலும் விபரங்களுக்கு:

ஹீலர். ஜெயகோபால் அய்யா,
கோயம்புத்தூர்.

Ph: 98436 43211.










#enthirangal #yenthirangal #yantra #chakkras #chakram #thiruvambalam #srichakram #sudharsanam #tirumoolar #thirumoolar #thirumandthiram #yantras #handcurvedyantras #handwrittenchakkras
 

கருத்துகள்