"கருவறை பீடத்தில் திருமுறை யந்திரங்கள்"

***திருமுறைக்குப் பெருமைதரும் திருமந்திரச் சக்கரங்கள்***

"கருவறை பீடத்தில் திருமுறை யந்திரங்கள்"


கோவில் கருவறை பீடத்தின் கீழ் சில முக்கியமான யந்திரங்கள் வைக்கப்படும். 
இதற்குள் ஏராளமான அறிவியல் உண்மைகள்  பொதிந்துள்ளது.


மந்திர ஒலிகளை உள்வாங்கி, வழிபடும் அடியார்கட்கு உளமகிழ்வு தரும் என்பதும் அனைவரும் கண்ட உண்மை.

நேர்மறை எண்ணங்களை நமக்கு வழங்கிடும் முதன்மையான இடம் ஒன்று உண்டெனில், அது நமது திருக்கோவில்கள் மட்டுமே. 


கடவுள் சிலைக்குக்கீழ் வைக்கப்படும் யந்திரங்களே அதற்குரிய முழுமுதற்காரணமாகும்.


புகழ்பெற்ற திருக்கோவில்களில், யந்திரங்கள் வைப்பதற்குகென்றே சிறப்பான ஆகம முறையினைக் கையாள்வர்.


பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குட நன்னீராட்டின் பொழுது அவை மீண்டும் புதுப்பிக்கப்படும்.


கோவில் எனும்போதே, சிலைகளுக்குக் கீழ் வைக்கப்படும் யந்திரங்கள் மிகவும் முக்கியமான இடம்பெறும் என்பதில் அய்யமில்லை.


பஞ்சபூத ஆற்றலைக் கோவில் கருவறைக்குள் நிலைநிறுத்துவதில்யந்திரங்களின் பங்கு மகத்தானது.


நமது இல்லங்கள், அலுவலகம், மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அமைக்கப்படும் யந்திரங்களுக்கே
நிறைய ஆகம விதிகள் உண்டு.


அவ்வாறானால், கோவில் பீடங்களுக்கு அமைக்கும் யந்திரங்களுக்கு எவ்வளவு விதிமுறைகள் இருக்கும்...?


தூய மந்திரங்களாலும், வேள்விகளாலும் மிகவும் முறையான ஆகம முறைகளுடன் அமைத்தல் அவசியம்.







நம் முன்னோர்கள் கோவில் திருப்பணிகள் தொடங்கும் பொழுதே, அதற்குரிய சிவாச்சாரியார்களைக் கொண்டு  இறைத்தன்மையை உளமார உணர்ந்து, இதுபோன்ற பணிகளை சிரமேற்கொண்டு  செய்து முடித்துள்ளனர்.

தூய்மையான உலோகத் தகடுகளைப் புனிதப்படுத்துதல், பிழை சிறிதுமின்றி நேர்த்தியாகக் கையால் மட்டுமே  எழுதுதல், அளவுகள், இறைவனுக்கேற்ற சக்கரங்கள் தேர்ந்தெடுத்தல், அதற்குரிய மந்திரங்களால் உயிர்பெறச் செய்தல், தூய வாசனாதி திரவியங்கள், நிவேதனம், வேள்விகள், மற்றும் பல்வேறு முறைகளால் உருவாக்கம் பெறும் யந்திரங்களுக்கு சிறப்புகள் பல உண்டு. 

கருவறையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு அருகில் சென்று நீங்களும் வணங்கிப் பாருங்கள், மேற்கண்ட உண்மைகளை உணர்ந்து மகிழ்ந்திடுவீர்.







#sivayantra #yantra #chakra #yentra #yenthiram #chakram #srichakra #shriyantra #shreeyantra #shrichakra #thiruvambalam #navakari #enthiram #anthra #yanthiram #sudharsanayantram #balashanmugayantram பஞ்சபட்சிஎந்திரம் #சக்கரங்கள் #சக்கரம் #எந்திரம் #யந்திரம் #நவாக்கரி #புவனாபதி #திருவம்பலச்சக்கரம் #அன்னபூரணிஎந்திரம்

மஹான் திருமூலர் அருட்குடில்,

ஈச்சனாரி, (விநாயகர் கோவில் அருகில்),

பொள்ளாச்சி பிரதான சாலை,

கோயம்புத்தூர் - 641021

 

அலைபேசி: 9788119224

புலனம்: 9788119224

திருச்சிற்றம்பலம்


கருத்துகள்