💕 மாங்கல்யம் 💕
மணமகளின் மறு இதயமாக போற்றப்படுவது 💥 "திருமாங்கல்யம்" 💥
https://www.sivayantra.com/
மணமான பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை, மற்றுமோர் இதயமாகப் போற்றுவது உலகறிந்த உண்மை.
பெரும் பொருட்செலவில் அல்லது மிக எளிமையான முறையில் திருமணம் நடைபெறினும், மாங்கல்யம் கழுத்தில் ஏறியவுடன், தனது அடுத்தகட்ட வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறாள் மணப்பெண்..
அச்சமயம் தேவையற்ற சொற்கள் காதில் விழாத வண்ணம் மங்கள வாத்தியம் இசைக்க, மந்திர ஒலிகள் முழங்க, இனிய நினைவுகளாக நடைபெறும்.
அவ்வாறு நடைபெறும் திருமண நிகழ்வில் மாங்கல்யம் பிரதானமாகப் போற்றப்படுகிறது.
பச்சரிசி, தேங்காய், வெற்றிலை பாக்கு, எலுமிச்சம்பழம், மல்லிகைப்பூ வைத்திருக்கும் தாம்பாளத் தட்டில், தாலி எனும் மங்கள மாங்கல்யம் மஞ்சள் நூல் கோர்த்து வைக்கப்படும்.
மாங்கல்யத்தை முறையாகப் புனிதப்படுத்த, ஆனைந்து, அதாவது பசுவில் இருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோமியம், பசுஞ்சாணம் கலந்த புனித நீர் மிகச்சிறந்ததாகும். பஞ்சகவ்யத்திற்கான பொருட்கள் இதுவே.
முறையான மந்திரங்களுடன் நிறைவான பூஜை செய்து,
"சுபமான நேரம் பார்த்து;
திருவாளன் கரம் கொடுத்து;
பெருமானின் அருள் கொண்டு;
அருளாளர் ஆசியுடன்;
திருவளர்ச் செல்வியை;
திருமதி ஆக்கும் நிகழ்வு... நம் தமிழ் மரபு ஆகும்."
வாழ்க மணமக்கள்
வாய்மைஈ ரெட்டெய்திச்
சூழ்செல்வம் மக்கள் நாள்
சுற்றமொடும் வாழ்க
திருக்குறள் தொண்டர் சீர்
சித்தாந்தம் தொன்னூல்
உருக்கமுடன் ஓதி வாழ்க.
https://www.sivayantra.com/
#தமிழ்முறைதிருமணம் #கல்யாணம் #tamilmarriage #திருமுறைகல்யாணம் #maalaimaatral #kannikadhanam
#bridalmakeup #kanchipattu #kanjivaram #jewellery #tamilponnu #silksaree #puresilk #chennai #tamilmakeupartist #silksarees #tamillove #kollywood #traditional #sareelove #hindubride #photography #kanchipuramsaree #tamilmemes #tamilstatus #kanchipuram #handloomsilk #kalyanam #bridaljewellery #tamilmovie #tamilsong #tamillyrics #weddingdress #coimbatore #keralawedding #tamilanda #tamilponnu
கருத்துகள்
கருத்துரையிடுக