முகக்கவசம் என்னும் மூக்குவாய் மூடி

"முகக்கவசம் என்னும் மூக்குவாய் மூடி" 

https://www.sivayantra.com/

முகத்தை முழுமையாய் மூடாத முகக்கவசம் 
பெயரளவில் முரண்..."மூக்குவாய்க் கவசம் என அறிவோம்."

அறுவை சிகிச்சை செய்பவரும், அரிதாக சிலரும் அணிந்தது... 
இன்று அகிலமெங்கும் அரசாட்சி செய்கிறது.

அணிந்தவர்களை ஆய்ந்தால்... பல தகவல் அறிந்திடலாம்.

மூக்குத்தி அணிந்தோர்க்கு சிறு கவலை, 
முக அழகு தெரியாதென்று. 

புன்னகை செய்வோரைப் புரிந்து கொள்ள இயலவில்லை, 
உதட்டுச்சாயத்தை உதறினர் பலர்.



புதுமையாகப் பல கவசம் பூ வேலைப்பாட்டுடன்...
பெருங்கடைகள் முதல் பெட்டிக்கடை வரை, 
பலவித வண்ணங்களில் மூக்குவாய்க் கவசங்கள். 


உச்சிவெயில், பச்சைவயல் மைல் தூரம் மனிதர்கள் இல்லை.
தலையில் கட்டும் துணியை, தாடைக்கு மேல் இறுகக் கட்டி தண்ணீர் கட்டும் விவசாயி...
"காற்றிலும் பரவுதாம் தொற்று என்றார்".


அனேக நபர்களின் அடையாளம் தெரியவில்லை, 
சினேகிதனே என்றாலும் சிலநேரம் தெரிவதில்லை.


அத்தியாவசியமானது அன்றாடம் வீட்டு விலங்குகளுக்கும்  மாட்டிவைத்தனர் சிலர். 


கழற்றி எறிந்த கவசங்கள் கணக்கிலடங்காது, 
கடைத்தெருவில் மட்டுமின்றி, ஊர்த்தெருவிலும் புரள்கிறது.


அபராதத்திற்குப் பயந்து அணிவோர் பலர்...
விவரம் புரியாமல் அணிபவர் சிலர்.


தவறில்லை; அணிவோம்... வரும் ஆபத்தைத் தவிர்ப்போம்.
வருமுன் காத்து வாழ்ந்திடுவோம் மகிழ்வுடன்.


https://sivayantra.com/

கருத்துகள்