உன்னை உணர்த்தும் உருத்திராக்கம்
எல்லா தெய்வங்களும் சிவபெருமானையே வணங்கியதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு வணங்கும்போது ருத்திராக்கம் போன்ற சிவச்சின்னங்கள் அணிந்தும், பஞ்சாட்சர மந்திரம் ஓதியும் வழிபட்டதாக வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.
ருத்திராக்கம்
சிவபெருமானின் கண்களில் இருந்து தோன்றியதாக ஐதீகம். பல்வேறு நாடுகளில் ருத்திராக்க மரங்கள் உண்டு. தமிழகத்தில் சதுரகிரி மற்றும் நீலகிரியில் இவ்வகை
மரங்கள் உண்டு.
ருத்திராக்கத்தினை எல்லோரும் அணியலாமா என்ற ஓர் அய்யம் உள்ளது. சைவத்தைக் கடைபிடிப்போர் தாராளமாக அணியலாம். அணிந்து கொண்டு வழிபட பெரும் பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்பது முன்னோர்கள் வாக்கு.
அவ்வளவு
எளிதாக யாரும் அணிந்து கொள்ள இயலாது. ஆனால்
இதன் சிறப்புகள் எண்ணிலடங்கா.
உடல்
நோய் தீரவும், உடல் வெப்பத்தைக் குறைக்கவும் பஞ்சமுக ருத்ராக்கம் அணியலாம். அசைவ உணவை அறவே தவிர்ப்போர், ருத்ராக்கம் அணிந்து
ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக